493 வேட்பாளர்கள் தகுதிநீக்கம் ! தேர்தலில் போட்டியிட மூன்றாண்டு தடை

248

கடந்த 2017ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்திருந்தது.

ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த 493 வேட்பாளர்கள், குறித்த காலக்கெடுவிற்குள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

இதுபற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரமேஷ் சந்த் ராய் கூறுகையில், “தேர்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்யத் தவறியதால், 493 வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of