வந்தது அரியர் எழுத… இருந்தது போதையில… நேர்ந்த பரிதாபம்..!

302

கோவை ராவுத்தர்பாலம் அருகே 4 இளைஞர்கள் சித்திக், கருப்பசாமி, கவுதம் உள்ளிட்ட நான்கு பேர் கொடைக்கானல் மற்றும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்கள் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் இறுதியாண்டு படித்து வந்த நிலையில், மேலும் 2 பேர் அரியர் தேர்வு எழுத வந்துள்ளனர்.இவர்கள் 4 பேரும் இரவு 10 மணிக்கு மேல் மது வாங்கி இருள் நிறைந்த இரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். மது அருந்திவிட்டு அங்கே பேசிக்கொண்டு இருந்துள்ளனர். சிறிது நேரம் சென்ற பிறகு அங்கே போதையில் அமர்ந்துள்ளனர்.பின்னர் அந்த வழியே அதிவிரைவு இரயில் வண்டி வந்துள்ளது. இதை அறியாமல் போதையில் படுத்திருந்த அந்த 4 மாணவர்கள் மீது இரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடதத்திற்கு விரைந்த காவல்துறையினர் நான்கு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் மட்டும் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது.