சீனாவில் 5.2 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் | Earthquake in China

296

சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 10.55 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், யுலின் நகரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of