கேரளாவில் இன்ப அதிர்ச்சி : மனமுடைந்து இருந்த ஏழை நபருக்கு அடித்த 5 கோடி ரூபாய்..!

2619

கேரளாவில் நெல்லையை சேர்ந்தவரிடம் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 50).இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மூவாற்றுப்புழா என்ற இடத்தில் குடியேறினார்.

மிகவும் ஏழ்மை நிலையில் குடும்பத்தை நடத்தி வந்த செல்லையா வாழ்க்கையை ஓட்டுவதற்காக மொத்த வியாபாரிகளிடம் லாட்டரி சீட்டுகளை வாங்கி அதை நடந்தே சென்று பொது மக்களிடம் விற்று வந்தார்.

சமீபத்தில் கேரள அரசு வெளியிட்ட காருண்யா பாக்கியஸ்ரீ பம்பர் லாட்டரி சீட்டுகளையும் வாங்கி விற்று வந்தார். குலுக்கலுக்கு முதல் நாள் 4 லாட்டரி சீட்டுகள் மட்டும் விற்பனையாகவில்லை. அவரும் பலரிடமும் லாட்டரி சீட்டை வாங்கிக் கொள்ளும் படி கெஞ்சிக் கேட்டும் யாரும் வாங்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த செல்லையா அந்த லாட்டரிச்சீட்டுகளுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் லாட்டரி முடிவுகள் வெளியானபோது தான் விற்ற லாட்டரிச்சீட்டிற்கு பரிசு விழுந்து உள்ளதா என்று அவர் பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரிச்சீட்டிற்கு முதல் பரிசான ரூ.5 கோடி கிடைத்திருந்தது தெரிய வந்தது.

உடனே தான் வாங்கிய லாட்டரி மொத்த வியாபாரியிடம் சென்று தனக்கு பரிசு விழுந்தததை செல்லையா உறுதி செய்துகொண்டார். ரூ.5 கோடி பரிசு பெற்றது பற்றி செல்லையா கூறியதாவது:-

லாட்டரிச்சீட்டுகளை விற்று ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த என்னால் எனது குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியவில்லை.

பிள்ளைகளையும் சரியாக படிக்க வைக்க முடியவில்லை. லாட்டரி பரிசு மூலம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பேன். சொந்த ஊரில் வீடு கட்டுவேன்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of