5 கோடி தடுப்பூசிகள் தயார் – சீரம் நிறுவனம்

764

இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பெருந்தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கி வந்தது.

தங்களின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கிகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்தில் விண்ணப்பித்துள்ளது.

இந்த நிலையில் ‘ 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளோம் என்று சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறி உள்ளார்.

மேலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டுப்பட்டு உள்ளது என்றும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விரைவில் இங்கிலாந்தில் ஒப்புதல் கிடைத்துவிடும், இந்தியாவிலும் அடுத்த மாதத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement