தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு குளு குளு..!

540

சென்னையில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் இரவில் பரவலாக கனமழை பெய்தது.

அடையாறு, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோன்று ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.