வாழை தோட்டம் காட்டு யானைகள் அட்டகாசத்தால் நாசம்.

362

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை தோட்டம் காட்டு யானைகள் அட்டகாசத்தால் நாசம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை தோட்டத்தை காட்டு யானைகள் அழித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கம்பம் பள்ளதாக்கு பகுதியில் மலையடிவாரத்தை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, கரடி, காட்டுப்பன்றி, என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வன விலங்குகள், விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

வெட்டுகாடு பகுதியில் விளை நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் 4 ஏக்கர் பரப்பிலான வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

விளை நிலங்களில் வன விலங்குகள் நுழைவதை தடுக்க அகழிகள் அமைக்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of