சென்னை 5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்: ஏ.கே.விஸ்வநாதன்

235

சென்னை மாநகரதில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என்பது இன்னும் மூன்று மாதத்தில் பொருத்தப்படும் காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் காவல் சரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1270 சிசிடிவி கேமராக்களை காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், 2019 ஆண்டிற்குள் 5 லட்சம் கேமராக்கள் சென்னை மாநகரத்தில் பொருத்தப்படும் எனவும், இதற்கு பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பங்காற்றிவருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், பல வழக்கில் சிசிடிவி உதவியாக உள்ளது எனவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறியவும் வழக்கிற்கு தடயமாகவும் சிசிடிவி உதவியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சிசிடிவி பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்ட ஏ.கே.விஸ்வநாதன், பாதுகாப்பு நிறைந்த மாநிலம் தமிழகம், மாநகரம் சென்னை என்று பாராட்டி அண்மையில் முதல்வருக்கு விருது வழங்கியுள்ளதைச் சுட்டிக் காட்டினார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.