விமான விபத்தில் 5 பேர் பலி

104
Kenya

கென்யா நாட்டில் Ol Kiombo என்ற இடத்தில் இருந்து Lodwar நகரம் நோக்கி பயணம் செய்த சிறுரக விமானம் காலை 11 மணியளவில் Masaita Forest View என்ற இடத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட இயந்திர கோளாறால் அருகில் இருந்த வயலில் விழுந்து நொறுங்கியது.

இதில் 5 பேர் பலியாகியுள்ளதாக Rift Valley போலீஸ் கமாண்டர் எட்வர்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த விபத்தில் வெளிநாட்டவர் சிலரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.