5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை!

136

மெக்சிகோவின் பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து சக போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிடாகவ்ரோ நகரில் நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.