காலமானார் நிஜ வாழ்க்கையின் “மெர்சல் டாக்டர்”

302

சென்னை ராயபுரத்தில் குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவம் அளித்து வந்த மருத்துவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த 45 ஆண்டுகளாக தன்னிடம் வரும் மக்களுக்கு இலவசமாகவும், அவர்கள் கொடுக்கும் தொகையை மட்டும் பெற்றுக் கொண்டும் மருத்துவ சேவை அளித்து வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் 2 ரூபாய் மட்டுமே வாங்கி வந்த அவர், பின்னர் 5 ரூபாய் வாங்க தொடங்கினார். 5 ரூபாய் மட்டுமே செலுத்தி ஏழை மக்கள் சிகிச்சை பெற்றதாக கூறுகின்றனர். இப்படி, தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல் தான் கற்ற மருத்துவத்தை பிறருக்கு உதவும்படி பயன்படுத்தி, மருத்துவத்துறையில் சிறந்த தொண்டாற்றி வந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் இன்று காலை வயது முதிர்ச்சியின் காரணமாக காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.