குழந்தைகளின் ஆபாச படமோ, வீடியோவோ வைத்திருந்தாலோ 5 ஆண்டு சிறை

324

குழந்தைகளின் ஆபாச படமோ, வீடியோவோ வைத்திருந்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளின் பாலியல் புகைப்படங்களை வணிக ரீதியாக அவற்றைப் பார்வையிடவும், சேமிப்பதற்கும், விநியோகத்திற்கு வைத்திருப்பதும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக கடுமையான தண்டனையை வழங்க சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ”

இந்த மசோதா சட்ட அமைசகத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் விரைவில் திருத்தங்களை செய்யும் என நம்பப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.