5 ஆண்டுகள் வரை தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை

250

5 ஆண்டுகள் வரை பெருந்தொற்று தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்று சீரம் நிறுவன தலைவர் அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. இந்த மருந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் பொது பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உலக மக்கள் அனைவருக்கும் பெருந்தொற்று தடுப்பூசி கிடைக்க  5 வருடங்கள் வரை ஆகலாம் என்று, சீரம் நிறுவன தலைவர் அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், உலக அளவில் 15 பில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், கண்டறியப்படும் தடுப்பூசி இரண்டு டோஸ்களாக இருந்தால், அனைவருக்கும் இந்த தடுப்பூசிகள் கிடைக்க குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே வைரஸ் தொற்று தடுப்பூசிகள் 2024ஆம் ஆண்டு வரை போதிய அளவு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். உலக மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்க மருந்து நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை என்றும் அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.