கண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை

542

திருச்சி மாவட்டத்தில் பெற்ற மகளை அடித்து, கடும் வெயிலில் ஒரு மணி நேரம் நிற்க வைத்து தண்டனை வழங்கியதால் மயங்கி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் வசித்து வரும் பாண்டியன் என்பவர், கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்தியகமலா தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இவர்களுக்கு 5 வயதில் லத்திகாஸ்ரீ என்னும் மகள் உள்ளார். இந்நிலையில் கோடை விடுமுறையால் லத்திகாஸ்ரீ அதிக மணி நேரம் தொலைக்காட்சி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்த தாய், மகளை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. மேலும் ஆத்திரம் தாங்காமல் கடும் வெயிலில் ஒருமணி நேரம் நிற்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோர்வடைந்த சிறுமி மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதித்த போது மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு அனுமதித்த போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியே சோகமயமானது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of