காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

601

மாமல்லபுரம் அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காரும், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கடும்பாடி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of