சென்னையில் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள்

844

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தியாகராயநகர், புரசைவாக்கம், மற்றும் வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்கும், கடைகளுக்கும் மக்கள் எளிதாக, செல்வதற்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்புப்பேருந்துகள் என்ற ஸ்டிக்கருடன் அந்த பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காகவும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

பாரிமுனை முதல் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப்பேருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement