ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.? – உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

953

ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீத ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும்.

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

Advertisement