சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்கள் – வைரல் வீடியோ

520

அமெரிக்காவின் ஐஒவா மாகாணத்தில் இன்று நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக 50-க்கும் அதிகமான வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்மாகாணத்தின் அல்டோனா மற்றும் மேற்கு மிக்ஸ்மாஸ்டர் பகுதியை இணைக்கும் நெடுச்சாலையில் பனிப்பொழிவு மற்றும் வெளிச்சமின்மையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.வெளிச்சமின்மையால் முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர். இதனால் பலமணி நேரத்திற்கு அச்சாலை மூடப்பட்டது.