யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன்

830

இலங்கை யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் 50 ஆயிரம் புத்தகங்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

இலங்கையின் யாழ்பாணத்தில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் அவ்வப்போது அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

sengottaiyan

அந்த வகையில் தமிழக அரசு சார்பில் புத்தகங்கள் வழங்கும் விழா யாழ்பாணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசு சார்பில் 50 ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். தமிழக அரசு இதுவரை ஒரு இலட்சத்து 5 ஆயிரம் புத்தகங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement