மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு

262

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் 27ல் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார்.

முன்னதாக ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மோடி நிகழ்ச்சியை காண்பதற்கான பார்வையாளர்கள் பதிவு நடைபெற்று வருகிறது.

இதுவரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு மேல் பதிவு செய்பவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எரிசக்தி தலைநகராக விளங்கும் ஹூஸ்டனில் மட்டும் சுமார் 1.3 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of