51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி

248

தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி,தஞ்சாவூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், காஞ்சிபுரம், மற்றும் கரூர், உள்ளிட்ட 14 மாவட்டங்களின் எஸ்.பி.கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட எஸ்.பியாக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக மணிவண்ணனும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை எஸ்.பி.யாக பாலாஜி சரவணனும், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சண்முகப்பிரியாவும், சென்னை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பியாக சக்திவேலும் நியமிக்கப்பட்டனர்.

திருச்சி எஸ்.பி.யாக பொறுப்புவகித்த ஜியா உல்ஹக் பணியிடமாற்றம் செய்யப்பட்டு ஜெயச்சந்திரன் புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜியா உல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாகவும், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக பத்ரி நாராயணனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை எஸ்.பி.யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சென்னை சைபர்கிரைம் எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of