“நான் ஜெயிச்சிட்டேன்..” 33-ஆண்டு தவத்தை நிறைவேற்றிய கொரோனா..!

882

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நூருதீன் என்பவர், கடந்த 1987ஆம் ஆண்டு முதன் முறையாக 10ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதியுள்ளார். அப்போது ஆங்கில பாடத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

அன்றிலிருந்து விடாமுயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி வந்த நூருதீன் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளார். தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 33, 34 மதிப்பெண்கள் பெற்று நூலிழையில் வெற்றியை தவறவிட்டுள்ளார்.

தற்போது 51 வயதான நூருதீன் தொடர் முயற்சியாக இந்த ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதுவதற்காக காத்திருந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெலங்கானா அரசு அறிவித்தது.

இதன் மூலம், 32 முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவிய நூருதீன், தனது விடமுயற்சியால் 33வது முறை தேர்வு எழுதாமலேயே வெற்றி பெற்றுள்ளார்.