தமிழகத்தில் உள்ள அணைகள் பராமரிப்புக்காக 543 கோடி ரூபாய் ஒதுக்கிடு

360

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டன. குறிப்பாக உலக வங்கி நிதியுதவியுடன், நாட்டில் உள்ள198 அணைகள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக 3,466 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள அணைகள் பராமரிப்புக்கான நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதில் 2,628 கோடி ரூபாய் உலக வங்கியும், 747 கோடி ரூபாய் அந்தந்த மாநில அரசுகள் அல்லது பணியை மேற்கொள்ளும் அமைப்புகளும், 91 கோடி ரூபாய் மத்திய அரசின் சார்பிலும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில், 89 திட்டங்களுக்கு, 746 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த நிதி, 803 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.