“உங்க காத கொண்டாங்களேன்..!” – ரகசியமாக உருவாகும் ஆப்பிள் Product

425

ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஐபேட் சாதனத்தை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஐபேட் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபோன் வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

இதற்கான ஒப்பந்தம் தாய்வானை சேர்ந்த ஒரு ஸ்மார்ட்போன் உபகரணங்களை உருவாக்கும் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

iPadதிட்டம் :

—>2020-ம் ஆண்டு துவக்கத்தில் ஐபேட் மாடல்களை அப்டேட் செய்து 5ஜி ஐபேட் மாடலை மட்டும் தாமதமாக வெளியிட திட்டம்.

—>ஆண்டின் முதல் அரையாண்டு காலகட்டத்தில் பின்புறம் 3டி சென்சிங் வசதி கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். இதனுடன் டைம் ஆஃப் ஃபிளைட் சிஸ்டமும் பயன்படுத்தபடலாம்.

—>இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திற்குள் குறைந்த விலையில் ஐபோன் எஸ்.இ.2 மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

சிறப்பம்சங்கள் :

ஐபோன் எஸ்.இ. 2 மாடலில்., டச் ஐ.டி. கைரேகை சென்சார், 3 ஜி.பி. ரேம், புகைப்படம் எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி, 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரின் வழங்கப்படலாம்.

மேலும், ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட உள்ளதாகவும்; இது பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் 3சி சான்று மற்றும் 5வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Apple-iPadவிலை :

இதன் துவக்க விலை 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 32,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of