5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

268

சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வை எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளோம்.

எந்த மாணவரும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று பரீட்சை எழுத வேண்டிய அவசியம் இல்லை. 5 பேர், 8 பேர் இருந்தாலும் அவர்களும் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம்.

பரீட்சையில் 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். அதில் எந்த அச்சமும் மாணவர்களுக்கு ஏற்படாது. பெற்றோர்களும், கல்வியாளர்களும் இதில் அச்சப்பட தேவையில்லை.

5,8-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை சோதிக்கும் வகையில் இந்த பயிற்சியை கொடுப்பதற்காகவே பொதுத்தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement