5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து.. – தமிழக அரசு அறிவிப்பு

521

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஆனால், பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்க இருந்த பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.