பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், 16 பேர் பலியான சோகம்

381

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள் அட்டைப்பெட்டிகளைப் போல் சரிந்து விழுந்தன. இது வரை 16 பேர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் எதிரொலியாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் ஜெனரேட்டர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.