வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பம்

353

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 23-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வெளியிட்டார்.

அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6-ஐ மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 933 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 115 பேரும் விண்ணப்பித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ஐ 51 ஆயிரத்து 233 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ஐ 89 ஆயிரத்து 194 பேரும் முகவரி மாற்றம் செய்ய (படிவம் 8 ஏ) 53 ஆயிரத்து 633 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது என்றும், வரும் அக்டோபர் 7 மற்றும் 14 அன்று சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பொதுத்துறை வங்கிதலைவர்களுடன் ஜெட்லி ஆலோசனை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of