ஒரே நாளில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..!

935

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டன், தங்கத் செல்வன், சின்னத்தம்பி, மகாராஜன், சின்னத்தம்பி, ராசுக்குட்டி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கிசிங்கர் உள்ளிட்ட 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Advertisement