பானுப்பிரியா மற்றும் அவரது தம்பி..! 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..! சிறுமிக்கு செய்த கொடுமை..?

885

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பானுப்பிரியா. பிரபல நடிகர்களுக்கு தாய் வேடம் ஏற்று நடித்த இவர், சின்னத்திரையிலும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அன்று, ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தபால் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், பானுப்பிரியா வீட்டில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுமி வேலை செய்வதாகவும், அந்த சிறுமியை கடந்த 1 ஆண்டு காலமாக வீட்டில் இருப்பவர்கள் கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சம்பவ இடம் தொடர்புடைய பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது தம்பியின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of