திருச்சியில் 6 பேரால் ஒரு கிராமமே தவிப்பு…! என்ன காரணம் தெரியுமா..?

258

சென்னை: திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந் நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதனை தொடர்ந்து அந்த கிராமமே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

மணப்பாறை என்ற பகுதியை அடுத்த கண்ணுடையான்பட்டி என்ற ஊராட்சியை சேர்ந்த கிராமம் ஒன்றில் 75 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா இருந்தது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் மூதாட்டியின் குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த கிராமத்தையே தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதி என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of