6 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்வாகவில்லை.., மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியா?

1025

தமிழகத்தில் ஆண்டுக்கு பல லட்சம் பொறியியல் மாணவர்கள் தங்களின் கல்லூரி படிப்பை முடித்து வெளிவருகின்றனர். இவர்கள் கல்லூரி படிப்பை முடித்தாலும் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருக்கின்றனர்.

இதற்கு காரணம் தரமற்ற கல்லூரிகளும், அதில் கற்பிக்கப்படும் தரமற்ற கல்வி முறையும் தான், பல கோடி இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி விட்டது. இப்படி பொறியியல் கல்லூரிகளின் நிலை இருக்கும் நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் 6 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தரமற்ற கல்லூரிகள் என 25 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியா உள்ளதா?

அரியலூர் கே.கே.சி.பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர் எஸ்.எம்.ஆர் ஈஸ்ட் கோஸ்ட் பொறியியல் கல்லூரி, திண்டுக்கல் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி தமிழன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர் எலிசபெத் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் ஸ்டெடிவோல்ட் பொறியியல் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

இதேபோல் 27 கல்லூரிகளில் 5 சதவீத மாணவர்களும், 74 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 171 கல்லூரிகளில் 25 சதவீத மாணர்களும், 187 கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
PRABHAKARAN N Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
PRABHAKARAN N
Guest
PRABHAKARAN N

They don’t have good library. They never read books for learning but only for exams.