6 மாத குழந்தையின் சாகசம்..! வைரலாகும் வீடியோ..!

2340

இணையத்தில் வைரலாகும் வீடியோக்களை பார்க்கும்போது தான், இப்படியெல்லாம் உலகில் நடக்கிறதா என்பது தெரிந்துக்கொள்ள முடிகிறது. ஒரு சில வீடியோக்கள், நெட்டிசன்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆளாக்கிவிடும்.

அந்த வகையில், 6 மாத குழந்தை வாட்டர் ஸ்கீயிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன்மூலம் இளம் வயதில் வாட்டர் ஸ்கீயிங் செய்து, உலக சாதனையை படைத்துள்ளது அக்குழந்தை.

வீடியோவை பார்த்த ஒரு சிலர், குழந்தையின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர், குழந்தையின் உயிர் மீது பெற்றோர்களுக்கு துளியும் அக்கறை இல்லை என்று கடுமையாக சாடி வருகின்றனர்.