அழுதபடி கிடந்த 6 மாத குழந்தையை காப்பாற்றிய மக்கள்

214

திருப்பூர் அருகே உள்ள கோயிலில், 6 மாத பெண் குழந்தை விட்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் உள்ள கோயில் வாசலில், 6 மாத பெண் குழந்தை தனியாக  அழுதபடி கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்டு காங்கேயம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காங்கேயம் போலீசார், குழந்தையை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்த பிறகு, குழந்தை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை விட்டு சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of