“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..! அதிரடி சட்ட திருத்தம்..!

375

தேசிய கொடி, அசோக சக்கரம், நாடாளுமன்ற முத்திரை, உச்சநீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படுகிறது.

தற்போதுள்ள சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும் சட்டத்தின்படி, இக்குற்றத்தை முதல் தடவை செய்தால் 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. அதே தவறை மறுபடியும் செய்தாலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படுவதில்லை.

சின்னங்கள் மற்றும் பெயர்களை தனியார் வர்த்தக மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சட்டத்தில் நுகர்வோர் விவகார அமைச்சகம் திருத்தம் கொண்டு வருகிறது.

அதன்படி குடியரசுத் தலைவர், பிரதமர் புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடி, மகாத்மா காந்தி, அசோக சக்கரம், நாடாளுமன்ற தர்மா சக்கரம், உயர் மற்றும் உச்சநீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றின் சின்னம் மற்றும் பெயர்கள், வர்த்தகம் மற்றும் விளம்பரங்களுக்கு தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதே தவறை மீண்டும் செய்தால் 5 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வருகிறது.