காவிரி ஆற்றில் குளித்த 6 பேரில் 3 பேர் சடலமாக மீட்பு

366

நாமக்கல் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 6 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த 6 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் 6 பேரும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர்.


இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், சரவணன், அவரது மனைவி ஜோதிமணி மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை காணவில்லை.

தகவலறிந்து வந்த போலீசார் சரவணனின் மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தாரகேஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் ஆங்காங்கே மணல் அள்ளப்பட்டுள்ளதே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் குழந்தைகள் நீரில் மூழ்கியதாகவும் அவர்களை காப்பாற்ற சென்றபோதே சரவணனும் ஜோதிமணியும் நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of