6 வயது சிறுமிக்கு 100 முறை வன்கொடுமை! சைகோவுக்கு வழங்கிய அதிரடி தீர்ப்பு!

1268

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் காணாமல் போன மற்றும் சீரழிக்கப்பட்ட குழந்தைகள் தேசிய மையத்திற்கு ஒரு புகார் கிடைத்தது.

அதில், இளைஞன் ஒருவன், 6 வயது சிறுமியை, பிறந்த நாள் முதல், தொடர்ச்சியாக, இதுவரை 100 முறை வன்கொடுமை செய்து, அதனை இணையதளத்தில் பதிவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த நபரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவர் குற்றம் செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது காதலியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த கொடூரனுக்கு 120 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.