6 வயது சிறுமி..! சீரழித்த அண்ணன்கள்..! தாயும் உதவிய பயங்கரம்..!

823

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 6 வயதுள்ள சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமிக்கு 2 அண்ணன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி அன்று விளையாடப்போவதாக கூறிவிட்டு சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் குழந்தையை தேடி பார்த்துவிட்டு, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், சிறுமியை தேடி வந்தனர். இறுதியில் சிறுமியின் உடல் உயிரிழந்த நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது போலீசார் சிறுமியின் அண்ணன்கள் இருவரிடம் துருவி துருவி நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுமி விளையாடிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த அண்ணன்கள் இரண்டு பேரும், மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இவர்கள் கொலை செய்வதை பார்த்த அவர்களது தாய், குடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காக அவர்களுக்கு உடந்தையாக இருந்து, சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார், அண்ணன்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களது தாயை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of