அம்மா அறுக்காதீங்க வலிக்கிறது என்ற சத்தம் : தாயால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்

876

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை அலைகளை ரசித்தபடி பலர் கடற்கரையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சிலரோ உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

வழக்கம்போல மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்த சமயத்தில் அம்மா அறுக்காதீங்க வலிக்கிறது, என்ற சத்தம் விவேகானந்தர் சிலை அருகிலிருந்து கேட்டது. அங்கு சென்ற பொதுமக்களுக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.குழந்தைகளின் கழுத்தை அறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணின் பெயர் பவித்ரா (32). பி.எஸ்ஸி படித்துள்ளார். இவரின் கணவர் சந்திரசேகர். இவர்களுக்கு தனுஸ்யா (6) என்ற மகளும் பத்மேஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.

சந்திரசேகர் பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இதனால் குடும்பத்தோடு சந்திரசேகர் பெங்களூருவில் குடியிருந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பவித்ரா, குழந்தைகளுடன் தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்குச் செல்வதாகக் கூறிக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பஸ் மூலம் சென்னை வந்த பவித்ரா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்தவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக பிளேடு வாங்கிய அவர். தான் இறந்த பிறகு குழந்தைகளைக் கவனிக்க ஆளில்லை என்பதால் குழந்தைகளையும் கொலை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

முதலில் தனுஸ்யாவின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். வலியால் அவர் துடித்தபோதும் ஈவு இரக்கமின்றி அறுத்துள்ளார். அதன் பிறகு பத்மேஷின் கழுத்தை அறுத்துள்ளார்.

பிளேடு மற்றும் கை முழுவதும் ரத்தமாக இருந்தநிலையில் தன்னுடைய கழுத்தை அறுத்துள்ளார். கழுத்தறுக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்து பவித்ராவின் செயலைத் தடுத்துள்ளனர்.

தொடர்ந்து ஆம்புலன்ஸுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.  கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களும் அங்கு வந்தனர்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனுஸ்யாவின் கழுத்தில் ஆழமாக வெட்டுக் காயங்கள் விழுந்ததால் அவர் இறந்துவிட்டார்.

ஆனால் பத்மேஷ் பவித்ரா ஆகியோருக்கு லேசான காயங்கள் என்பதால் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்துவிட்டனர். மயக்கம் தெளிந்த பவித்ரா, தன்னுடைய இரண்டு குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் பவித்ரா மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of