செல்போனில் கேம்… டாய்லட்டில் சிக்கிய 8 வயது சிறுவன்…!

471

மத்திய சீனாவின் வுஹான் நகரத்தில் வசிக்கும் 8 வயது சிறுவன் பல மணிநேரமாக டாய்லட்டில் உட்கார்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளார்.நீண்டநேரம் உட்கார்ந்திருந்ததால் அச்சிறுவன் திடீரென டாய்லட்டின் உள்ளே சிக்கினான். உடலின் பிற்பகுதி குழிப்பாங்கான இடத்தில் சிக்கியது.

இதனால் கதறி அழுத அச்சிறுவன் தனது தாயாரை அழைத்துள்ளான். அவரது தாய் பதறி அடித்தபடி முயற்சித்தும் சிறுவனை வெளியே எடுக்க முடியவில்லை.

இதனை அடுத்து  மீட்புப்படைக்கு தாயார் தகவல் அளிக்கவே, விரைந்து வந்த மீட்புப்படையினர் மிக கவனமாக செயல்பட்டு சிறுவனை மீட்டுள்ளனர்.

செல்போன் கேம் மோகத்தில் பல சிறுவர்கள் விபத்தில் சிக்குவது பல இடங்களில் பரவலாக நடந்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of