சுஜித் சம்பவம்..! இன்னும் திருந்தாத சிலர்..! புதுச்சேரியில் அதிர்ச்சியடைந்த மக்கள்..!

1334

சுஜித்தின் மரணத்தை தொடர்ந்து, ஆழ்துளை கிணறுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் 60க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமக் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வருடங்களாக இதே நிலை நீடிப்பதால், கால்நடைகள் குழிக்குள் விழுந்து உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மூடப்படாத ஆழ்துளைகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.