திருவாரூரில் முதல் பலியாக 60 வயது மூதாட்டி உயிரிழப்பு

158

திருவாரூர் மாவட்டம், பொதக்குடி பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிர்ப்பலி இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்நிலை தொடர்பாளர் 99 பேர், இரண்டாம் நிலை தொடர்பாளர் 30 பேர் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று  எண்ணிக்கை 2ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 34ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of