தசரா பண்டிகையை காண வந்தவர்கள் மீது ரயில் மோதி 61 பேர் பலி

666

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் தசரா பண்டிகையை காண, ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், அவர்கள் மீது, அசுர வேகத்தில் வந்த ரயில் மோதி 61 பேர் பலியாகினர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

அமிர்தசரஸ் நகரின் ஜோடா படாக் பகுதியில் நேற்றிரவு தசரா பண்டிகை கொண்டாட்டப்பட்டது. ரயில் தண்டவாளம் அருகே நடந்த நிகழ்ச்சியை காண ஏராளமாக பொதுமக்கள் அங்கு குவிந்திருந்தனர்.

மேலும் பலர் தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தனர். ராவணன் உருவ பொம்மை எரித்த போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, தண்டவாளத்தில் உள்ளூர் ரயில், எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி, அசுர வேகத்தில் வந்தது.

பட்டாசுகள் வெடித்ததால், ரயிலின் எச்சரிக்கை ஒலி, அவர்களுக்கு கேட்கவில்லை. சில நொடிகளில், அந்த பகுதியை கடந்த ரயில், தண்டவாளம் மீது நின்றிருந்தவர்கள் மோதியது. இந்த துயர சம்பவத்தில், 61 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

தசரா பண்டிகையின்போது நடந்த இந்த சோக சம்பவம், நாடு முழுவதும் மக்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of