மசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan

358

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா என்ற மாவட்டம் உள்ளது. இம்மாவட்டதின் ஜா தரா பகுதியில் உள்ள மசூதிக்கு வெள்ளிக்கிழமையான நேற்று வழக்கம்போல மக்கள் தொழுகைக்கு சென்றனர்.

தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மசூதியில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of