இப்படி ஒரு ஆச்சரியமா..? ஆண் துணையின்றி முட்டைகள் ஈன்ற மலைப்பாம்பு..! எப்படி நடந்தது..?

939

இயற்கையின் அதிசயங்களை பார்த்து வியக்காத ஆட்களே இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இந்த கூற்றை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் என்ற மிருகக்காட்சி சாலையில், 62 வயதுடைய மலைப்பாம்பு ஒன்று வசித்து வருகிறது. இந்த பாம்பு, அங்குள்ள ஆண் பாம்புகளிடம் இருந்து தனித்த நிலையில் தான், வளர்ந்தது. இருப்பினும், 7 முட்டைகளை, இந்த பாம்பு ஈன்றுள்ளது.

இதுகுறித்து பேசிய மிருகக்காட்சிசாலையின் மேலாளர் மார்க் வன்னர், சில மலைப்பாம்புகள், முந்தைய இனப்பெருக்கத்தின்போது, சில விந்தனுக்களை தங்களுக்குள் ஒளித்து வைத்துக்கொள்ளும்.

ஆனால், இந்த மலைப்பாம்பு அப்படியான திறன் பெற்றது இல்லை என்று மேலும் ஆச்சரியப்பட வைக்கிறார். இதோடு சேர்த்து, 60 வயதிற்கு மேல் உள்ள மலைப்பாம்புகள் முட்டை போடும் திறனை இழந்துவிடும்.

ஆனால், 62 வயதான இந்த பாம்பு எப்படி முட்டை ஈன்றது என்றும் நிபுனர்கள் ஆச்சரியமடைகின்றனர். அந்த பாம்பு ஈன்ற முட்டைகளை மரபணு ரீதியாக ஆராய்ச்சி செய்தால் தான் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.