முதலமைச்சர் முன்னிலையில் சரணடைந்த 644 பயங்கரவாதிகள்..!

396

அசாம், நாகாலாந்து உள்ளிட்ட வடமாநிலங்களில், தனி மாநிலம், கூடுதல் சுதந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன.

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, போரோலாந் தேசிய ஜனநாயக முன்னணி, காம்தாபூர் விடுதலை அமைப்பு, வங்காள தேசிய விடுதலை முன்னணி உள்ளிட்ட 8 அமைப்புகள் கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பல தாக்குதல்களை நடத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதில், பல அமைப்புகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களாகவும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில், தடைசெய்யப்பட்ட அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதன்படி, அந்த அமைப்புகள் வன்முறையை தவிர்த்து அரசங்கத்துடன் சமாதானப்போக்கில் செயல்பட முடிவு செய்துள்ளன.

இதையடுத்து பல பகுதிகளில் இருந்த அந்த அமைப்புகளை சேர்ந்த 644 பயங்கரவாதிகள் அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில் இன்று சரணடைந்தனர். கவுஹாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை அசாம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement