250 சிறுமிகள்..! 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்..! டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..!

866

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மருத்துவர் ஜோயல் லீ ஸ்கார்னெக். 68 வயதாகும் இவர், மத்திய மற்றும் மேற்கு பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் இவர் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி சிறுமியின் பெற்றோர் கடந்த 2017-ஆம் ஆண்டு புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த மருத்துவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போலீசார் மருத்துவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அதில், மருத்துவரின் டைரி ஒன்று கண்டறியப்பட்டது. அந்த டைரியை படித்த காவல்துறையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் என்னவென்றால், அந்த டைரியில் 250-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் எவ்வாறெல்லாம் வன்கொடுமை செய்யப்பட்டனர் என்பது குறித்து ஜோயல் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அந்த 250 – பெண்களையும் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இந்த விசாரணையில், அந்த 250 பெண்களும் சிறு வயதில் இருக்கும் போது, மருத்துவர் ஜோயலால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

மேலும், பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்த போது, சிறுமிகளாக இருந்ததால், அச்சத்தில் வெளியே சொல்லவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.