மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி!

226

பீகார் முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் குழந்தைகளை மூளைகாய்ச்சல் நோய் தாக்கியது.

அதிலிருந்து இதுவரை இந்த நோய் பாதிக்கப்பட்டு 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ஜப்பான் என்சபிலிட்டிஸ் என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.இன்று முஷாபர் பூர் கிருஷ்ணா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. கெஜ்ரிவால் மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து இதுவரை மொத்தம் 69 குழந்தைகள் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.

குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of