சத்தியம் டிவியின் 6-வது ஆண்டு ரத்த தான முகாம்

136

ரத்த தானத்தின் பெருமை மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், 6-வது ஆண்டாக சத்தியம் தொலைக்காட்சியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரத்த தானம் வழங்கினர்.

சத்தியம் இவாஞ்சல் அறக்கட்டளையின் தொடக்க தினத்தை முன்னிட்டு, சத்தியம் டிவியின் சார்பில் ரத்ததான முகாம் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி நடத்தி வருகிறது. சத்தியம் இவாஞ்சல் அறக்கட்டளையின் சார்பில், பேரிடர் நிவாரணம் மட்டும் இல்லாமல், பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.அந்தவகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகப்படுத்தும் வகையில், சர்வதேச மகளிர் தினத்தில், சத்தியம் தொலைக்காட்சி மற்றும் லயன்ஸ் ரத்த வங்கி சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெறுகிறு.

இன்று நடைபெற்ற முகாமை, சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.P. ஐசக் லிவிங்ஸ்டன் ரத்ததானம் வழங்கி தொடங்கி வைத்தார். அதையடுத்து, சத்தியம் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், ஆர்வத்துடன் முன்வந்து ரத்த தானம் அளித்தனர்.