7 வயது சிறுவனின் வாயை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்..,! ஏன் தெரியுமா..?

1057

சென்னை புறநகர்ப்பகுதியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன், தாடை பகுதியில் வீக்கத்துடன், 7 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

அச்சிறுவனுக்கு வாயில் அறுவை சிகிச்சை செய்தபோது, வீக்கத்துக்கு காரணமாக இருந்த 200 கிராம் எடையுள்ள கட்டிபோன்ற ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்த கட்டிப் போன்ற சதையில் சிறிய, நடுத்தர, பெரிய என வகை,வகையாக 524 பற்கள் இருந்தது தெரிய வந்தது.

அந்த பற்களை வரிசையாக கொட்டி, மருத்துவர்கள் சிறுவனின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் காண்பித்தனர். உலக அளவில் இதுபோன்ற வாயிலிருந்து ஒரே சமயத்தில் 524 பற்கள் அகற்றப்படுவது இதுவே முதன்முறை என்பது மட்டுமல்ல, இதுவொரு மருத்துவ விந்தையாகவும் பார்க்கப்படுகிறது.

தற்போது சிறுவனம், வீக்கல் இல்லாமல் சிறந்த முறையில் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.